சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் களிடம் ஓட்டுக் கேட்கச் சென்ற திருமாவளவன் நெற்றி நிறைய விபூதி பூசி சாமி கும்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்த, நான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல... இந்து மதத்தை வைத்து மதத் தீவிரவாதம் செய்பவர்களைத் தான் எதிர்க்கிறேன் என்று புதுவித விளக்கம் கொடுத்து சமாளித்துள்ளார் தொல்.திருமாவளவன்.
ஓட்டுக்காக எந்த சமரசத்திற்கும் தயாராகி விட்டனர் நமது அரசியல்வாதிகள்.மேடைக்கு மேடை சனாதன தர்மம், இந்துத்வா எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்கம் என்று ஓங்கி முழங்கி வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இதுவரை கோயில்கள் களுக்குச் சென்று சாமி கும்பிட்டதாக தகவல் இல்லை.
இந்நிலையில் இம்முறை சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தொல். திருமாவளவன், முதன் முறையாக ஓட்டுக்காக சிதம்பரம் நடராஜர் கோயில் படியேறினார். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள், திருமாவளவனுக்கு நெற்றி நிறைய விபூதி பூசி, மாலை மரியாதையும் செய்தனர். திருமாவளவனின் இந்த பக்தி மயமான கோலம் ஒரு பக்கம் விமர்ச னத்தையும், மறுபக்கம் கேலி, கிண்டலுக்கும் ஆளானது
இந்நிலையில் தான், இன்று டிவிட்டர் பதிவில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றது, விபூதி பூசியதற்கு புதுவித விளக்கம் கொடுத்து திருமாவளவன் சமாளித்துள்ளார். இந்து மதத்திற்கு திருமாவளவன்எதிரி இல்லை. இந்த மதத்தின் பெயரால் இந்து மதவாதம் செய்பவர்களைத் தான் விசிக எதிர்க்கிறது. சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் என் நெற்றி முழுவதும் திருநீர் பூசினார்கள். என்னுடைய கொள்கைக்காக இந்து மதத்தின் சம்பிரதாயங்களை நான் எதிர்க்கவில்லை என்று திருமாவளவன் ஒரு சமாளிப்பு சமாளித்துள்ளார். இதனையும் ஒரு சாரார் கிண்டலடிக்காமல் இல்லை.