எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு....லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

Loyola college students opinion poll results, which constituency who will win

by Nagaraj, Apr 5, 2019, 14:02 PM IST

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் பல்வேறு சுவாரஸ்ய முடிவுகளும் வெளியாகியுள்ளன.

அதன்படி அடுத்தமுறை யார் பிரதமராக வரவேண்டும் என்ற கேள்விக்கு, ராகுல் காந்திக்கு ஆதரவாக 35.7 % பேரும், மோடிக்கு ஆதரவாக 27 % பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க கூட்டணி 27- 33 தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அமமுக 2 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. 18 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அதிமுக 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அமமுக 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில், மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 21 ஆயிரத்து 464 பேர் பங்கேற்றுள்ளனர். அந்த ஆய்வில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று 33 % பேரும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் வர வேண்டும் என்று 22 % பேரும், தினகரன் வர வேண்டும் என்று 20 % பேரும், கமல்ஹாசன் வரவேண்டும் என்று 7 % பேரும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த முறை மோடிக்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாக 27 % பேரும், வாய்ப்பு இல்லை என 55 % பேரும் தெரிவித்துள்ளனர். அடுத்தமுறை யார் பிரதமராக வரவேண்டும் என்ற கேள்விக்கு, ராகுல் காந்திக்கு ஆதரவாக 35.7 % பேரும் மோடிக்கு ஆதரவாக 27 % பேரும் ஆதரவாகவும் தெரிவித்துள்ளனர். அதிமுக அரசு தாக்குப் பிடிக்க மத்திய அரசின் உதவிதான் காரணம் என்று 59 % பேர் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தொகுதிவாரியாக யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதையும் கருத்துக்கணிப்பில் லயோலா முன்னாள் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:

1.திருவள்ளூவர் (தனி) : காங்கிரஸ்

2. வடசென்னை : திமுக

3. மத்திய சென்னை : திமுக

4. தென் சென்னை : திமுக

5 ஸ்ரீபெரும்புதூர் : திமுக

6.காஞ்சிபுரம் : திமுக

7. அரக்கோணம் : தி.மு.க

8. வேலூர் : இழுபறி

9. கிருஷ்ணகிரி : இழுபறி

10. தருமபுரி : இழுபறி

11.திருவண்ணாமலை : தி.மு.க

12. ஆரணி : காங்கிரஸ்

13.விழுப்புரம் : இழுபறி

14. சேலம் : தி.மு.க

15. கள்ளக்குறிச்சி : தி.மு.க

16. நாமக்கல் : கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி

17. ஈரோடு :ம.தி.மு.க

18 . நீலகிரி : தி.மு.க

19.பொள்ளாச்சி : தி.மு.க

20.திருப்பூர் : இழுபறி

21. கோயம்புத்தூர் : பா.ஜ.க

22. திண்டுக்கல் : தி.மு.க

23. கரூர் : காங்கிரஸ்

24. திருச்சி :அ.ம.மு.க

25.பெரம்பலூர் :இ.ஜ.க

26. கடலூர் : தி.மு.க

27 .சிதம்பரம் :வி.சி

28. மயிலாடுதுறை : அ.தி.மு.க

29. நாகப்பட்டினம் : இழுபறி

30. சிவகங்கை : காங்கிரஸ்

31. தஞ்சாவூர் : தி.மு.க

32. மதுரை : மார்க்ஸிஸ்ட்

33.தேனி :அமமுக

34. விருதுநகர் : காங்கிரஸ்

35. ராமநாதபுரம் : இழுபறி

36.தென்காசி :இழுபறி

37. தூத்துக்குடி : தி.மு.க

38. திருநெல்வேலி : அ.தி.மு.க

39.கன்னியாகுமரி : காங்கிரஸ்

40.புதுச்சேரி : காங்கிரஸ்

இதன்படி அதிமுகவுக்கு மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலியில் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று தெரிய வந்துள்ளது. அதன் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு கோவையில் மட்டுமே வெற்றி வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது.

You'r reading எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு....லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை