மிஸ்டர் லோக்கல் படத்தை சுற்றும் வதந்தி! இன்று வெளியாகும் அந்த முக்கிய அறிவிப்பு

Controversies around sivakarthikeyans MrLocal movie

by Sakthi, Apr 5, 2019, 13:34 PM IST

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற மே 1ஆம் தேதி மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

மிஸ்டர் லோக்கல்

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு முன்னர் அறிவித்திருந்தது. ஏப்ரல் மாதம் விந்துவிட்டது, ஆனாலும் படம் குறித்த டிரெய்லரோ, பாடல்களோ இன்னும் வெளியாகவில்லை. தவிர, படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டது. அதனால், மே 1ஆம் தேதி படம் வெளியாகாது என்று ஊடகங்களும், ரசிகர்களும் தெரிவித்துவந்தனர்.

இந்த செய்திகளையெல்லாம் தடுப்பு போட்டு நிறுத்தியுள்ளது படக்குழு. படத்தில் இடம் பெறும் அந்தப் பாடல்காட்சியை சில தினங்களுக்கு முன்பு எடுத்து முடித்திருக்கிறது படக்குழு. தவிர, பாடல் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

You'r reading மிஸ்டர் லோக்கல் படத்தை சுற்றும் வதந்தி! இன்று வெளியாகும் அந்த முக்கிய அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை