அட்லீயின்  செயலால் `தளபதி 63’ படம் பாதியில் நிற்கும் அபாயம்! கண்டுகொள்வாரா விஜய்

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமான ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

அட்லீ விஜய்

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் தொடங்கி நடந்துவருகிறது. படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். இவர்களோடு கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி என ஒரு பெரிய கூட்டணியே படத்தில் நடிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு.

தளபதி 63’ படம் பற்றிய தகவல் என்னவென்றால்,  படத்தை தொடங்கும் போதே, குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்து தருவதாக அட்லீ , தயாரிப்பு தரப்பான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் சொல்லியிருந்தாராம். ஆனால் பட்ஜெட்டைப் பற்றி கவலைப் படாமல், அளவுக்கு அதிகமாகவே செலவு செய்து படத்தை உருவாக்கிவருகிறாராம் அட்லீ. இதனால் தயாரிப்பு தரப்பு கடும் அதிர்ச்சியிலும், அதிப்தியிலும் இருக்கிறது.  ஏற்கெனவே ராஜா ராணி படத்தை தயாரித்த பாக்ஸ் நிறுவனம் அடுத்த படத்தை எடுக்கவில்லை. தெறி படத்தை தயாரித்த கலைப்புலி தாணு, அட்லீ செய்த செலவு பார்த்து மிரண்டுவிட்டார். சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தை தயாரித்த தேணாடாள் நிறுவனம் கடனில் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த செய்தி.

இந்நிலையில், படப்பிடிப்பின் போதே சுதாரித்துக் கொண்டது ஏ.ஜி.எஸ்.நிறுவனம். இது பற்றி அட்லீயிடம் கேட்டால்,  படத்தின் செலவுக்கு நான் காரணமில்லை என்றும், தயாரிப்பு நிறுவன ஆட்கள் தான் செலவுக்கு அதிகமாக கணக்கு காட்டி பணத்தை அடிப்பதாகவும் சொல்லியிருக்கார் அட்லீ. தங்களது நிறுவனத்தையே குற்றம் சொல்லுவதால், அட்லீ மீது கடும் கோவத்தில் இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். தவிர, குறிப்பிட்ட பட்ஜெட்டுக்க்கு மேல் சென்றால் படத்தை நிறுத்துவது குறித்தும் முடிவெடுக்க தயாராகிவிட்டதாம் படக்குழு.

இயக்குநர் அட்லீக்கும், தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கும் நடுவே பனிப்போர் தொடங்கிவிட்டது. ஆனால் தயாரிப்பாளர்கள் மேல் அக்கறை கொள்ளும் விஜய் இந்த விஷயத்துக்கு வாயை திறக்கவே இல்லையே என்று கவலைப்படுகிறதாம் தயாரிப்பு தரப்பு. மேலும், விஜய் கொடுக்கும் இடத்தினால் தான் அட்லீயும் அளவுக்கு அதிகமாக ஆட்டம் போடுவதாகவும் ஒரு பேச்சு கோலிவுட்டில் இருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
We-do-not-freedom-speech-express-good-opinions-Film-director-SA-Chandra-Sekar
நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை
vickram-enjoyed-on-watching-Kadaram-kondan-in-kasi-theatre-with-fans
கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்
Tanjore-Tamil-girl-mastered-in-Rap-Music-world
ராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி!
Bigil-Song-Leaked-and-goes-viral-movie-crew-was-shocked
லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!
Man-arrested-for-harrassing-Bengali-actress-Arunima-Ghosh-on-social-media
பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'! மர்ம நபர் கைது
Kangana-Sister-blame-Tapsee-directly-and-a-cold-war-started-in-bollywood
பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்!
Three-Bollywood-Actors-play-villain-role-against-Super-star-Rajinikanth
ரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்!
Aadai-Movie-Director-cries-for-India-loss-in-World-Cup-semis
ஆடை பட இயக்குநரை அழ வைத்த தோனி!
Kaappan-Satellite-rights-bagged-by-Sun-tv
காப்பான் சேட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சன் டிவி!
Tomorrow-six-movies-will-be-release-in-kollywood
நாளைக்கு 6 படங்கள் ரிலீஸ்! ஜெயிக்கப்போவது யாரு?
Tag Clouds