தமிழகத்தில் நாளை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு! – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

underway work going on tn election

by Suganya P, Apr 17, 2019, 00:00 AM IST

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளிலும், இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மதுரை தவிர்த்து மற்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழா எதிரொலியாக மதுரையில் மட்டும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். மக்களவைக்கு 845 பேரும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 269 பேரும் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம். 2,95,94,923  ஆண் வாக்காளர்களும் 3,02,69,045 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 5,940  பேர் மூன்றாம் பாலினத்தவர். வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகத் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மஹாராஷ்டிரா மாநில சிறப்பு காவல் படை மற்றும் மத்திய காவல் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவுக்கான ஆயுத்த பணிகளைத் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது.

ஜனநாயகப் படுகொலை..ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகின்றனர்! –பாஜக, அதிமுகவை விளாசும் தொல்.திருமாவளவன்

You'r reading தமிழகத்தில் நாளை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு! – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை