3 எம்எல்ஏக்கள் விவகாரம்... சபாநாயகருக்கு தடை ... உச்ச நீதிமன்றம் அதிரடி!

by Nagaraj, May 6, 2019, 13:14 PM IST

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூவரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகக் கூறி, அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார்.

இதனால் இந்த 3 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார். ஒரு வாரத்துக்குள் மூன்று பேரும் தங்களது நிலைப்பாடு பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட சில மணி நேரத்தில் சட்டசபை செயலாளரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தரப்பில் சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை கோரி முறையீடு செய்யப்பட்டது.

அதில், தமிழக சட்டசபை சபாநாயகர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் 7 நாட்களுக்குள் விளக்கம் கோரி உள்ளார். இந்த நிலையில் எங்கள் பதிலுக்குக்கூட காத்திருக்காமல் அவர் எங்களை தகுதி நீக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளது. கடந்த 30-ந் தேதி எதிர்க்கட்சியான திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு இப்படி நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது. அவர் பாரபட்சமாக செயல்படுகிறார்.

ஏற்கனவே துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான 10 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்தும் அவர்களை இதுவரை தகுதிநீக்கம் செய்யவில்லை. தன்னுடைய பாரபட்சமான நோக்கினால் எங்கள் மீது இதுபோன்ற நடவடிக்கையை அவசரமாக எடுக்கிறார்.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. இது தொடர்பாக முன்பு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியுள்ளது. பெருவாரியான உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த சபாநாயகர் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க முடியாது. எனவே சபாநாயகர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று முறையீடு செய்திருந்தனர்.

திமுக சார்பிலும் இதே காரணம் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சபாநாயகர் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் விவகாரம் : சபாநாயகர் Vs உச்ச நீதிமன்றம் ... மோதல் வெடிக்குமா..?


Speed News

 • சென்னை ராயபுரத்தில்

  3717 பேருக்கு கொரோனா

  தமிழகத்தில் சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவாக 3,717 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து, தண்டையார்பேட்டை 2,646, தேனாம்பேட்டை 2,374, கோடம்பாக்கம் 2,323, திரு.வி.க. நகர் 2,073, அண்ணாநகர் 1,864, அடையாறு 1,153, வளசரவாக்கம் 1,043 பேருக்கும்  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


   
  Jun 7, 2020, 13:30 PM IST
 • ஜெ.அன்பழகன் உடல்நிலையில்

  ஓரளவு முன்னேற்றம்..

  திமுக மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனுக்கு கடந்த 2ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. 

  இந்நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. ஆரம்பத்தில் 80 சதவீதம் வென்டிலேட்டர் உதவியால் மூச்சு விட்ட அன்பழகன், நேற்று 67 சதவீத வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்தார். இந்நிலையில், அவருக்கு சுவாசிப்பதற்கு வெறும் 29 சதவீத அளவே வென்டிலேட்டர் உதவி தேவைப்படுவதாகவும், அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. 

  Jun 7, 2020, 13:24 PM IST
 • மகாராஷ்டிராவில் 
  82,968 பேருக்கு கொரோனா..
   
  மகாராஷ்டிராவில் இது வரை 82,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில், 37,390 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு பலியானவர் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிராவே முதல் இடத்தில் உள்ளது.
   
   
  Jun 7, 2020, 13:21 PM IST
 • டெல்லியில் நாளை

  ஓட்டல், கோயில்கள் திறப்பு

  டெல்லியில் நாளை முதல் ஓட்டல்கள், கோயில்கள், வணிக வளாகங்கள் திறக்கப்படும் எ்னறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த மாதமே தளர்த்தப்பட்டாலும், வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. நாளை முதல் இந்த கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. 

  டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. இது வரை 27,654 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், நாளை முதல் டெல்லி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது. 

  Jun 7, 2020, 13:17 PM IST
 • டெல்லி குடிகாரர்களுக்கு

  ஒரு நல்ல செய்தி..

  டெல்லியில் கடந்த மாதம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போது, மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது மதுபானங்கள் மீது அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில்(எம்.ஆர்.பி), 70 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு பணிக்கு நிதி சேர்ப்பதற்காக இந்த ‘கொரோனா வரி’ விதிக்கப்பட்டது.

  இந்நிலையில்,  வரும் 10ம் தேதி முதல் இந்த கொரோனா வரி வாபஸ் பெறப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

  Jun 7, 2020, 13:10 PM IST