சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரெய்லரை தொடர்ந்து பாடலும் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மிஸ்டர் லோக்கல். படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். யோகிபாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஹிப்ஹாப் ஆதி. பொதுவாக சிவகார்த்திகேயனின் படங்கள் பூஜையின் போதே பட ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுவார்கள். அப்படி, இப்படத்துக்கு மே 1ஆம் தேதி என்று நாள் குறிக்கப்பட்டது. ஆனால் சிலபல காரணத்தால் படம் தள்ளிப்போகி மே 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை நேற்று வெளியிட்டது படக்குழு. வெளியாகி சில மணிநேரங்களிலேயே டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்தது. இதுவரை 24 லட்சம் பேர் டிரெய்லரை பார்த்துவிட்டனர்.
டிரெய்லர் வெளியான சில மணிநேரத்திலேயே படத்தின் மேனாமினுக்கி பாடலையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனெவே படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில் இது படத்தில் இடம்பெறும் மூன்றாவது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டையைக் கிளப்பும் மிஸ்டர் லோக்கல் மேனாமினுக்கி பாடல்
Advertisement