காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. அத்திவரதர் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதாலும், அரசு நிர்வாகம் சரிவர திட்டமிடாததாலும் தினமும் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று மின்சாரம் தாக்கி பலர் காயமடைந்தனர்.
அத்திவரதர் தரிசனப் பாதைகளில் 10 ஆயிரம் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. அதனால், ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் பணியில் இருப்பவர்கள், பக்தர்களை அங்கும் இங்குமாக அலைக்கழிக்கின்றனர். உள்ளூர்காரர்களின் வாகனங்கள் மட்டுமின்றி, வெளியூர் வாகனங்களும் ஊருக்குள் நுழைந்து விடுவதால், எல்லா தெருக்களிலும் போக்குவரத்து நெருக்கடியாகவே காட்சி தருகின்றன. எப்போது இந்த விழா முடியுமோ என்று உள்ளூர்காரர்கள் புலம்பி வருகின்றனர்.
இன்றும் காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்காேனார் அத்திவரதரை தரிசிக்க குவிந்துள்ளனர். அவர்களை சமாளிக்க முடியாமல் வழக்கம் போல் போலீசாரும், ஊழியர்களும் திணறி வருகின்றனர்.
அத்திவரதர் தரிசனம் வரும் 17ம் தேதி நிறைவடைகிறது என்று ஏற்கனவே கலெக்டர் பொன்னையா அறிவித்திருந்தார். தற்போது அதை மாற்றி, 16ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் முடிக்கப்படும் என்றும் 17ம் தேதியன்று எந்த தரிசனமும் கிடையாது என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
அத்திவரதர் பற்றிய பேச்சு; என்னை தனிமைப்படுத்த சிலர் சதிவேலை : சுகிசிவம்