பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இறக்கத்துடன் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைகிறது. நேற்றும் சந்தை விலை ஏற்றமடைந்து முடிந்தது. ஆனால் இன்று அதற்கு நேர்மாறாக தங்கத்தின் விலை, நேற்றைய விலையை விட ஏற்றத்துடனே தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் தாக்கம் உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாக இருக்கம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4830க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.23 விலை உயர்ந்துள்ளது, எனவே ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4853க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4853
8 கிராம் ( 1 சவரன் ) - 38824
தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5072க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.23 விலை உயர்ந்து, கிராமானது ரூ.5095க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5095
8 கிராம் - 40760
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 1.30 பைசா விலை உயர்ந்து, கிராம் 65.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 65600க்கு விற்பனையாகிறது.