கடைசி பந்தில் சிக்சர் அடித்து த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்!

Punjab won the toss and elected to field.

by Loganathan, Oct 16, 2020, 11:44 AM IST

ஷார்ஜாவில் நடந்த நேற்றைய (15-10-2030) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.பெங்களூர் அணியின் கேப்டன் வீராட் கோலி நேற்றைய போட்டியில் அணியின் ரன்ரேட்டை போராடி உயர்த்தினார். தொடக்க இணையாகக் களமிறங்கிய படிக்கல்(18) , அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் பூரனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக மற்றொரு இணையான பின்ச் (20) ரன்னில் முருகன் அஷ்வின் பந்தில் போல்டாகி வெளியேறப் பெங்களூர் 62/2 என்ற இக்காட்டான நிலையை அடைந்தது.

பின்னர் களமிறங்கிய கிங் கோலி நிதானமாக விளையாடினார். நேற்றைய போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கும் டிவில்லியர்ஸ்க்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை(13) இறக்கி பரீட்சையம் செய்து பார்த்த பெங்களூர் அணிக்குப் பலன் கிடைக்கவில்லை.

ஒருபுறம் கோலி போராடிக் கொண்டிருக்க அடுத்தடுத்த களமிறங்கிய தூபே (23), மற்றும் டிவில்லியர்ஸ் (2) அவுட்டாக, 39 பந்தில் 3 பவுண்டரிகளை மட்டுமே விளாசிய கோலி 48 ரன்னில் ஷமி ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.ஆல்ரவுண்டரான கிரீஸ மோரீஸ் மற்றும் உடானா(10) இருவரும் கடைசியில் அதிரடி காட்டினர். மோரிஸ் 8 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 25 ரன்களை விளாசினார். இருபது ஓவர் முடிவில் கோலியின் படை 171/6 ரன்களை எடுத்திருந்தது.

பஞ்சாப் அணி சார்பில் முருகன் அஷ்வின் மற்றும் ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்த போட்டியில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய பஞ்சாப் அணி இருபது ஓவரில் 172 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. பெங்களூர் அணியும் பந்து வீச்சில் தொடர்ந்து அனைத்து சீசனிலும் சொதப்பி வருகிறது. அது நேற்றைய போட்டியிலும் தொடர்ந்தது. மேலும் பஞ்சாப் அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக நேற்றைய போட்டியில் அதிரடி மன்னன் "கிறிஸ் கெயில் களமிறக்கப்பட்டார்".

பஞ்சாப் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான லோகேஷ் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் நேற்றைய போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட்டனர்.தொடக்க இணையாகக் களமிறங்கிய ராகுல், அகர்வால் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர். பெங்களூர் அணியின் பந்து வீசி அவர்களிடம் எடுபடவில்லை.

விக்கெட் விழாத போதெல்லாம் சஹல் அந்த குறையைப் பெங்களூர் அணிக்குப் போக்கி வைப்பார். நேற்றைய போட்டியில் 8வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரரான அகர்வால் விக்கெட்டை வீழ்த்தி, அவர்களின் ரன்வேட்டையை நிறுத்தினார். அகர்வால் 25 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 45 ரன்களை சேர்த்தார்.

முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கெய்ல், ராகுலுடன் இணைந்து அதிரடி காட்ட பெங்களூர் பந்து வீச்சாளர்கள் உச்சக்கட்ட வெறுப்பை அடைந்தனர்.

கடைசி ஓவரில் 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பெங்களூர் அணி சஹலை பந்து வீச அழைத்தது. பேட்டிங் செய்து கொண்டிருந்த கெய்ல் முதல் மூன்று பந்தை டாட் பாலாக்க, 4 வது பந்தில் 1 ரன் அடிக்க, 2 பந்தில் 1 ரன் என்று பரபரப்பு தொற்றிக்கொண்டது.5 பந்தை ஆடிய ராகுல் ரன் ஓட, எதிர்முனையில் இருந்த கெய்ல் (45 பந்தில் 1 பவுண்டரி, 5 சிக்சர் என 53 ரன்களை விளாசி தனது கன்னி அரை சதத்தைப் பதிவு செய்தார்) ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் போட்டி உச்சகட்ட பரபரப்பை அடைந்தது.

கடைசி பந்தில் 1 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில், பஞ்சாப் வெற்றி பெருமா ? அல்லது போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லுமா ? என்ற பரபரப்பு ஏற்பட்டது. பூரன் களமிறங்க கடைசி பந்தில் சிக்சர் விளாசி பரபரப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து , பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தந்தார்.கடைசி வரை களத்தில் போராடிய பஞ்சாப் கேப்டன் ராகுல் 49 பந்தில் 1 பவுண்டரி, 5 சிக்சர் என 61 ரன்களை விளாசி வெற்றிக்கும் உதவி புரிந்து, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

8 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் இரண்டாவது வெற்றியை நேற்றைய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பதிவு செய்தது.

More Ipl league News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை