ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இந்த விழா நாளை நடக்கிறது. இந்த தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் ராமநாதபுரம் செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து காரில் ராமநாதபுரம் செல்லும் வகையில் அவரது பயணம் திட்டமிடப்பட்டுள்ளது . இதற்காக முதல்வருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ள அதே விமானத்தில்தான் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் பயணிக்க இருக்கிறார். அவர் மதுரை சென்று பசும்பொன் செல்ல திட்டமிட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் ஒரே நிகழ்ச்சிக்காக செல்வது இதுவே முதல் முறை.
ஒரே விமானத்தில் எடப்பாடி ஸ்டாலின்...
Advertisement