அட்மிஷனுக்காக தண்டோரா : தலைமை ஆசிரியரின் நூதன முயற்சி

Advertisement

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த ஈச்சம் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் . இந்தப் பள்ளியில் தற்போது 30 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் பள்ளி செல்லா குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும் பாதியிலேயே படிப்பைக் கைவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தவிர எந்த ஒரு கிராமத்திலும் 15 வயதிற்கு மேல் 60 வயதிற்குள் உள்ள ஆண்-பெண் யாரேனும் கல்வி கற்காமல் இருந்தால் அவர்களை புதிய வயதுவந்தோர் திட்டத்தில் கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.

இந்த உத்தரவின்படி ஈச்சம்பட்டி பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் இன்று காலை கிராமத்தில் உள்ள முக்கிய தெருக்களில் தண்டோரா போட்டபடி வலம் வந்தார். பள்ளி செல்லாமல் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள் என வீடு வீடாகச் சென்று கேட்டுக் கொண்டார். இதுவரை பள்ளிக்கூடம் பக்கமே செல்லாதவர்களையும் படிக்க வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். தலைமையாசிரியரே பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கத் தண்டோரா போட்டது அந்த கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியது . தலைமை ஆசிரியர் ராஜேந்திரனின் இந்த நூதன யுக்தியை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

Advertisement

READ MORE ABOUT :

/body>