நடிகர் தந்தை மீது நில மோசடி புகாரை தொடர்ந்து ஹீரோ மீது பண மோசடி புகார்..

by Chandru, Dec 11, 2020, 15:14 PM IST

கோலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவர் கிருஷ்ணா. யாமிருக்க பயம் ஏன், கழுகு, யாக்கை, வன்மம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகன். கிருஷ்ணாவின் சகோதரர் அஜீத் நடித்த பில்லா, ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் போன்ற பல படங்களை இயக்கியவர். நடிகர் கிருஷ்ணா தற்போது திருக்குறள், கிரகஹனம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் மீது அவரிடம் மேலாளராக பணியாற்றிய திலீப் குமார் என்பவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில், கிருஷ்ணா தன்னிடம் 10.43 லட்சம் ரூபாய்க் கடனாக பெற்றார். மூன்று தவணைகளாக இதனைக் கடந்த 2016ம் ஆண்டு அவரிடம் கொடுத்தேன் ஆனால் அவர் பணத்தையும் திருப்பி தரவில்லை, வட்டியும் தரவில்லை. பணத்தைத் திருப்பி கேட்டால் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கிருஷ்ணாவிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கேட்ட போது. படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் இருக்கிறேன். அங்கிருந்து வந்த பிறகு இதுகுறித்து விளக்கம் அளிக்கிறேன் என்றார். இதையடுத்து அவருக்கு விளக்கம் அளிக்க போலீசார் 15 நாள் அவகாசம் தந்திருக்கிறார்கள். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே இதுபற்றி கூற முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதத்துக்கு முன் காமெடி நடிகர் சூரி போலீசில் அளித்த ஒரு புகாரில் நடிகர் விஷ்ணு விஷால் தந்தை தன்னிடம் நில மோசடி செய்ததாக போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நடிகர் கிருஷ்ணாவுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஹேமலதா என்பவரை மணந்தார். ஆனால் ஒரு வருடத்திலேயே இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். நடிகர் கிருஷ்ணாவும், நடிகை சுனைனாவும் தற்போது காதலித்து வருவதாகக் கோலிவுட்டில் கிசு கிசு நிலவுகிறது.

You'r reading நடிகர் தந்தை மீது நில மோசடி புகாரை தொடர்ந்து ஹீரோ மீது பண மோசடி புகார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை