5 வருடத்துக்கு பிறகு ரீ என்ட்ரி ஆகும் பிரபல ஹீரோ.. இரட்டை ஹீரோயின் ஒப்பந்தம்..

Advertisement

திருட்டு பயலே, நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜீவன். இவர் கடைசியாகக் கடந்த 2015ம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது புதிய படம் மூலம் ரீ எட்ன்ரி ஆகிறார். வடிவுடையான் இயக்கத்தில் உருவாகும் படம் “ பாம்பாட்டம் “ ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதில்தான் ஜீவன் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகிறார். அதுவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களைத் தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு,மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக இப்படத்தைத் தயாரிக்கிறார். இதில் ஹீரோயினாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.

தமிழில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு இளவரசி கதாபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் ஆசிஷ் வித்யார்த்தி, தலை வாசல் விஜய் ஆகியோர் நடிக் கிறார்கள் இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரீஸ் செய்கிறார். அம்ரிஷ் இசை அமைக்கிறார். பா.விஜய், யுகபாரதி, விவேகா பாடல்கள் எழுதுகின்றனர். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்கிறார். சி.பழனி வேல் அரங்கம் அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் பயிற்சி அளிக்கிறார். தினேஷ், சிவசங்கர் நடனம் அமைக்கின்றனர். பண்ணை ஏ இளங்கோவன் இணை தயாரிப்பு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி வி.சி. வடிவுடையான் டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறும் போது,1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கி உள்ளேன்.மிகப்பெரிய சி ஜி நிறுவனம் ஒன்று இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மிகப் பிரமாண்டமாகச் செய்து வருகிறார்கள். மிகப்பெரிய பொருட்செலவில் மும்பையில் செட் அமைக்கப்பட்டு வருகிறது அங்குப் படத்தின் முக்கியமான காட்சிகளைப் படமாக்க உள்ளோம். படப் பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் மொத்தம் 120நாட்கள் நடைபெற இருக்கிறது என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>