குன்னூர் தனியார் எஸ்டேட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

Advertisement

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் எஸ்டேட்டில் ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேர் சடலமாக மீட்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் ஏராளமான தனியார் தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. அதில் ஒரு எஸ்டேட்டில் 300-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சார்ந்த அசோக் பகத் (27) என்பவர் தனது மனைவி சுமதி குமாரி (21), மகன் அபை(8), மகள் ரேஷ்மா (4) ஆகியோருடன் வசித்து எஸ்டேட்டில் வேலை செய்து வந்தார். நேற்று கணவன் மனனைவி இருவரும் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.

இன்று காலை அவரது வீட்டிலிருந்து யாரும் வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் வீட்டை திறந்து பார்த்த போது சுமதி குமாரி கழுத்து அறுதபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது மகன் அபையும் தலையில் காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து கொலக்கம்பை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் மோப்பநாயை கொண்டு சோதனையிட்டதில் அசோக் பகத் துக்கில் சடலமாக தொங்கியது கண்டுபிடிக்கபட்டது. மேலும் குடிநீர் தொட்டியில் மகள் ரேஷ்மாவும் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கபட்டது. 4 பேரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேரும் தற்கொலை செய்தனரா? அல்லது கொலை செய்யபட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொலக்கம்பை மற்றும் தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த மாதம் 8 வயது சிறுமி மாயமான நிலையில் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் அங்கு உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது. வடமாநில தொழிலாளர்களால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே வட மாநில தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்று தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

READ MORE ABOUT :

/body>