இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என சில அறிவுரைகளை டிவிட்டர் மூலம் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாப்பது தொடர்பாக இந்த கீச்சை வெளியிட்டுள்ளது. உங்கள் பணத்தையும், பின் எண்ணையும் பாதுகாத்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் இந்த அறிவுரைகளை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி. ஏடிஎம் மையத்தில் அல்லது POS (Point of Sale ) மையத்தில் பணம் எடுக்கு, பின் நம்பரை உள்ளீடு செய்யும் போது , மறைத்து கொண்டு செய்யவேண்டும்.
எப்போதும் உங்களின் ஏடிஎம் மற்றும் பின் எண்ணை மற்றவர்களிடம் பகிர்வதை தவிருங்கள். ஏடிஎம் அட்டையின் மீது பின் நம்பரை எழுதாதீர்கள். உங்களின் சுய விவரங்களான ஏடிஎம் அட்டை மற்றும் பின் விவரங்களை கேட்கும் தொலைபேசி அழைப்பு மற்றும் இ-மெயில் போன்றவற்றை தவிருங்கள். ஏடிஎம் அட்டையின் பின் நம்பரை தேர்வு செய்யும் போது, உங்களின் பிறந்தநாள், தொலைபேசி எண் மற்றும் சேமிப்பு கணக்கு எண் போன்றவற்றில் இருந்து வைக்காதீர்கள். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்து பின்பு வரும் ரசீதை பாதுகாப்பாக அல்லது குப்பை தொட்டியில் போட வேண்டும்.
ஏடிஎம் மையத்தில் உள்ள கேமராவை உற்று நோக்கிய பின்பு தங்களின் பரிமாற்றத்தை தொடங்க ஆரம்பிக்கலாம். பணிபறிமாற்றம் சார்ந்த குறுஞ்செய்திகளை சரிபார்த்து கொள்ளுங்கள். போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி. மேலும் சமீபத்தில் பணபரிமாற்றம் ரூ.10000 அல்லது அதற்குமேல் செய்தால், அந்த சேமிப்பு கணக்கில் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP யை உள்ளீடு செய்தால் மட்டுமே பரிமாற்றம் தொடங்க ஆரம்பிக்கும். இந்த சேவையானது கடந்த செப்டம்பர் 18 ல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.