வித விதமாக சமைத்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வெஜிடபிள் பிரியாணியில் சேர்க்கும் மீல்மேக்கரில் சுவையான கிரேவி செய்யலாம். சரி வாங்க மீல்மேக்கர் கிரேவியை எப்படி ருசியாக சமைப்பது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
மீல் மேக்கர் - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
வெண்ணெய் - 1 ஸ்பூன்
காய்ந்த வெந்தய இலைகள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
க்ரீம் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
தேவையான மீல் மேக்கரை எடுத்து வெந்நீரில் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரில் நன்றாக அலசி பிழிந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அலசிய மீல் மேக்கரை நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். மீல் மேக்கரை வறுத்த வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் அரைத்து வைத்த வெங்காயம் மற்றும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்கு வதங்கிய பிறகு வறுத்த மீல்மேக்கர், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்த பிறகு காய்ந்த வெந்தய இலைகள் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். கடைசியில் கிரீம் ஊற்றி சூடாக பரிமாறவும். இந்த ரெசிபியை சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.