இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..

by Logeswari, Apr 8, 2021, 20:31 PM IST

உண்மையான நம் பாரம்பரிய சத்து மாவு தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம். இந்த மாவுதான் குழந்தைகளுக்கு உண்மையான ஆரோக்கியத்தை கொடுக்கும். இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

தேவையான பொருள்கள்:-
ராகி- 2 கிலோ
சோளம்- 2 கிலோ
நாட்டு கம்பு- 2 கிலோ
பாசிப்பயறு- 1/2 கிலோ
கொள்ளு - 1/2 கிலோ
மக்காசோளம்- 2 கிலோ
பொட்டுக்கடலை- 1 கிலோ
சோயா -1 கிலோ
தினை - 1/2 கிலோ
கருப்பு உளுந்து -1/2 கிலோ
சம்பா கோதுமை-1/2 கிலோ
பார்லி- 1/2 கிலோ
நிலக்கடலை - 1/2 கிலோ
மாப்பிள்ளை சம்பா அவல்- 1/2 கிலோ
ஜவ்வரிசி-1/2 கிலோ
வெள்ளை எள்- 100 கிராம்
கசகசா- 50 கிராம்
ஏலம்- 50 கிராம்
முந்திரி- 50 கிராம்
சாரப்பருப்பு- 50 கிராம்
பாதாம் -50 கிராம்
ஓமம் -50 கிராம்
சுக்கு -50 கிராம்
பிஸ்தா- 50 கிராம்
ஜாதிக்காய்- 2
மாசிக்காய்- 2

செய்முறை:-
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும்.

அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டினால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு ரெடி.

You'r reading இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை