சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??

Advertisement

மாலையில் சூடான.. சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிற அனைவருக்கும் இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும். ராகி என்றாலே அதில் அளவுகடந்த ஆரோக்கிய சத்துக்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் நாம் ராகியை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதே இல்லை. மருத்துவர்கள் வாரத்திற்கு ஒரு வேளையாவது ராகியை எடுத்து கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர். ராகியில் பல வித உணவுவகைகளை செய்யலாம். சரி வாங்க ராகி சேமியாவை வைத்து எப்படி கட்லெட் செய்வது குறித்து பார்க்கலாம். இது குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்..

தேவையான அளவு:-
ராகி சேமியா - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 4
கேரட் - 1
வெங்காயம் - 1
கரம் மசாலாத்தூள் -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
வேர்க்கடலை - 4 ஸ்பூன்
சோம்பு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 50 கிராம்
மைதா - 4 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:-
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவிய எடுத்துக்கவும். உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். ஒரு பக்கம் பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான அளவு தண்ணீர் மாற்று உப்பு சேர்த்து மைதாவை தண்ணியாக கரைத்து கொள்ளவும்.

ராகி சேமியாவை மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சோம்பு, வேர்க்கடலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி முதலியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த கலவையை உருட்டி தட்டையான வாடுவத்தில் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடான பிறகு கட்லெட்டை மைதாவில் முக்கி அடுத்து அரைத்து வைத்த ராகி சேமியாவில் பிரட்டி சூடான எண்ணெய்க்குள் போட்டு வறுக்கவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். சுவையான ராகி சேமியா கட்லெட் தயார்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>