சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?

Advertisement

மாலை வேளையில் குழந்தைகளை மகிழ்விக்க ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரையை செய்து கொடுங்கள். இந்த கொரோனா காலத்தில் வெளியே இருந்து உணவு வாங்க தயங்குகிறோம். இதனால் வீட்டில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவை செய்து கொடுத்து மகிழ்வியுங்கள். சரி வாங்க ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரையை எப்படி கிரிஸ்பியாக செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-
உருளைக்கிழங்கு -4
ரவை -1 கப்
நீர் -2 கப்
கறிவேப்பிலை -தேவையான அளவு
கொத்தமல்லி இலை -தேவையான அளவு
பச்சை மிளகாய் -4
வெங்காயம் -2
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு ரவை சேர்த்து கட்டி வராமல் நன்றாக கிளறி விட வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.

இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் மற்றும் உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி வேக வைக்கவும். வெந்த பிறகு தோலை உரித்து உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும். பிறகு ரவையில் மசித்த கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மற்றும் கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, ரவையை ஃபிங்கர் போல் உருட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் உருட்டி வைத்த ரவை உருளைக்கிழங்கை எண்ணையில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை கரண்டியால் திருப்பி விடவும். நன்கு பொறிந்தவுடன் ஒரு தட்டில் வைத்து தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிடால் கலக்கல் சுவையாக இருக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>