நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 4000 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏப்.10ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை. கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை. மாவட்டங்களில் உள்ள மொத்த வியபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியபார கடைகளுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதற்காக "No mask, No service" திட்டத்தை மீண்டும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டது. "No mask, No service" என்பது மால்கள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், கேஸ் நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு எந்த சேவையும் வழங்கப்பட கூடாது என்பது தான். அதன்படி இந்த திட்டத்தை தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
முதல் முயற்சியாக மாஸ்க் அணிந்து வராத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட மாட்டாது என தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. 10ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.