12 ஆண்டுகள் தலைமறைவான கொலையாளி கைது

by Balaji, Jan 7, 2021, 19:06 PM IST

விழுப்புரம் அருகே வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் இன்று கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம் 2006 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமினில் வந்த அவர்களில் இளையராஜா என்பவர் மட்டும் தலைமறைவாகி விட்டார்.

கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா வயது (38) ஜாமினில் வெளிவந்து 12 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது ஆஜராகவும் இல்லை. அவர் பெங்களூரில் வேலை செய்து அங்கேயே திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இவர் சொந்த ஊர் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இது எடுத்து அவரது வருகையை தீவிரமாக கண்காணித்த போலீசார் இன்று ஊருக்கு வந்தவரை கைது செய்துள்ளனர்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை