மீனவர்களை காப்பாற்றி கேரளாவில் பாகுபலியான பொறியியல் மாணவன்!

by Sasitharan, Jan 7, 2021, 19:17 PM IST

கேரளாவில் மீனவர்களை காப்பாற்றிய பொறியியல் மாணவர் பாகுபலியாக உருவாகியுள்ளான். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நாட்டிகா கடற்கரையில் இருந்து 4 மீனவர்கள் கடந்த 5-ம் தேதி படகு வழியாக மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் கரைத்திரும்பவில்லை. இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்பு பணியாளர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, அப்பகுதியைச் சேர்ந்தச் சேர்ந்த பொறியியல் மாணவன் தேவங் சுபில் என்பவர் மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து மீனவர்களை மீட்க தனது ட்ரோன் கேமரா உதவும் எனக் கூறியிருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த மீனவர்கள், தம்பி இது விளையாட்டு அல்ல எனக்கூறி சுபிலை புறக்கணித்துள்ளனர்.

இருப்பினும், மீனவர்களை கண்டிப்பாக மீட்க வேண்டும் என்று முயற்சி செய்த சுபில் நாட்டிகா சட்டமன்ற உறுப்பினர் கீதா கோபியை தொடர்பு கொண்ட தேவங் மீனவர்களை மீட்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து, கீதா கோபியின் முயற்சியினால், காவல்துறை மற்றும் மீட்பு பணியாளர்கள் ட்ரோன் கேமராவுடன் சுபிலை கடலுக்குள் அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து, சுபில் தனது ட்ரோன் கேமரா மூலம் மீனவர்களை கண்டுபிடித்துள்ளார். பின்னர் கடலுக்குள் சென்ற குழுவினர் நான்கு மீனவர்களை உயிருடன் மீட்டு கரை திரும்பியுள்ளனர்.

You'r reading மீனவர்களை காப்பாற்றி கேரளாவில் பாகுபலியான பொறியியல் மாணவன்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை