ஸ்டாலின் தான் முதல்வராவரு.. பொன்.ராதாகிருஷ்ணனிடம் கெத்து காட்டிய மூதாட்டி!

Advertisement

பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திமுக சரிவை சந்திக்கும் என கூறி பேட்டியை முடித்தார். அப்போது மூதாட்டி ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி மக்களவைத்தொகுதி பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் வரும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக பெரும் சரிவைச் சந்திக்கும் என்று பேட்டி அளித்தார். அவர் பேட்டி அளித்தபோது அருகில் ஒரு மூதாட்டி நின்று கவனித்துக் கொண்டிருந்தார். பேட்டி முடிந்ததும், பொன்.ராதாகிருஷ்ணன் புறப்பட்டார். அப்போது அந்த மூதாட்டி, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வணக்கம் வைத்தார். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.

''ஐயா, மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வர வேண்டும், எங்க கஷ்டம் எல்லாம் தீர வேண்டும்'' என்று மூதாட்டி கூறினார். ''அம்மா கிட்டயும் சொல்லுங்க'' என்று கோயிலை நோக்கி பொன்.ராதாகிருஷ்ணன் கை காட்டினார். அந்த மூதாட்டி, ''அம்மா கிட்ட பேசிட்டுதான் வர்றேன். ஸ்டாலின்தான் முதல்வராக வருவார்'' என்று சொன்னார். அதற்கு, ''ரொம்ப சந்தோஷம்'' என்று கும்பிட்டுவிட்டு தனது காரை நோக்கி பொன்.ராதாகிருஷ்ணன் சென்றார். இது அங்கிருந்த பாஜகவினரையும், பொன்.ராதாகிருஷ்ணனையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. வேறு வழியின்றி அவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் என்று அறியாமல் மூதாட்டி அதிரடியாக வந்து தனது கருத்தைத் தெரிவித்தார். பொன்.ராதாகிருஷ்ணனும் அவரது ஆர்வத்தை உணர்ந்து சரி அம்மா என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். இது சுமுகமாக நடந்தாலும், மூதாட்டியின் செயல் உடனிருந்த பாஜக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!

READ MORE ABOUT :

/body>