தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், அதிமுக மற்றும் திமுக தங்களது ஐடி விங்க் மூலம் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டு தெரிந்து கொண்டது. தமிழகத்தில் அடுத்து திமுகதான் ஆட்சியமைக்கும் என்று திமுக நம்பிக்கையில் உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களிடம், திமுகதான் ஆட்சியமைக்கும் என கூறிவருவதாக தகவல் கூறுகின்றனர். ஸ்டாலினின் நம்பிக்கை பேச்சோடு நிற்காமல், அடுத்து அமைய இருக்கும் ஆட்சியின் அமைச்சர்கள் யார் யார் என்ற பட்டியலையும் தயார் செய்துள்ளதாக திமுக உயர்மட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது.
இதற்கிடையே, ஸ்டாலின் தற்போது தனது குடும்பத்தினர் உடன் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டாலின், துர்கா, உதயநிதி, கிருத்திகா உதயநிதி, சபரீசன், செந்தாமரை, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என குடும்பத்தினர் மொத்த பேரும் திண்டுக்கல் அருகே உள்ள லைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு விசிட் அடித்திருக்கிறார்களாம். மொத்தம் 17 பேர் என்பதால் இரண்டு குட்டி விமானங்களில் சுற்றுலா சென்றுள்ளார்கள்.
ஸ்பெஷல் சார்டடு ஃபிளைட் எனப்படும் இந்த குட்டி விமானமானது திருமேணி எர்த் மூவர்ஸ் பிரபாகருக்கு சொந்தமானதாம். ஸ்டாலின் வழக்கமாக இந்த விமானத்தில் செல்வாராம். கொடைக்கானலில் ஸ்டாலின் தங்குவது, சுற்றி வசதிகளை திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியும், அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாரும் தயார் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நாளை மறுநாள் வரை டூர் பிளான் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.