தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், ஸ்டாலின் தற்போது தனது குடும்பத்தினர் உடன் சுற்றுலா சென்றுள்ளார். ஸ்டாலின், துர்கா, உதயநிதி, கிருத்திகா உதயநிதி, சபரீசன், செந்தாமரை, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என குடும்பத்தினர் மொத்த பேரும் திண்டுக்கல் அருகே உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு விசிட் அடித்திருக்கிறார்கள். மொத்தம் 17 பேர் என்பதால் இரண்டு குட்டி விமானங்களில் சுற்றுலா சென்றுள்ளார்கள்.
ஸ்பெஷல் சார்டடு ஃபிளைட் எனப்படும் இந்த குட்டி விமானமானது திருமேணி எர்த் மூவர்ஸ் பிரபாகருக்கு சொந்தமானதாம். ஸ்டாலின் வழக்கமாக இந்த விமானத்தில் செல்வாராம். கொடைக்கானலில் ஸ்டாலின் தங்குவது, சுற்றி வசதிகளை திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியும், அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாரும் தயார் செய்துள்ளார்.
இதற்கிடையே, கொடைக்கானலில் ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக ஸ்டாலின் பேண்ட் சட்டை, கூலிங் கிளாஸ் என ஸ்டைலிஷ் லுக்கில் காட்சி அளிக்கிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.