மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேளகொண்டப்பள்ளி அருகே உள்ள தைலந்தோப்பில் கடந்த 26 ஆம் தேதி கைகள் கட்டப்பட்டு உடல் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்த பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணான 24 வயதான ஏலா என்பது தெரியவந்தது.

இறந்த ஏலாவின் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் 30 வயதான ராகுல், தனது மனைவி ஏலா மற்றும் மனைவியின் தங்கை 20 வயதான தமன்னாவுடன், கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக தொழிற்சாலையில் வேலை பார்ப்பதற்காக ஓசூர் வந்துள்ளார்.

அந்த சமயத்தில் ராகுலின் மனைவி ஏலா கர்ப்பிணியாக இருந்ததால், அவர் மட்டும் வீட்டிலிருக்க ராகுலும், தமன்னாவும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர். அப்போது இருவருக்கிடையே நெருக்கம் அதிகரித்து கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த ஏலா, தனது கனவரையும், தங்கையையும் பலமுறை கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஏலாவின் கண்டிப்பு கணவர் ராகுலையும் தங்கை தமன்னாவையும் கோபமடைய செய்ததால், கர்ப்பிணி என்றும் பாராமல் கணவனும், தங்கையும் சேர்ந்து கடந்த 21 ஆம் தேதி இரவு ஏலாவின் கைகளை கட்டி கழுத்தை நெரித்து கொலை செய்து தைலந்தோப்பில் வீசிச் சென்றுள்ளனர். மறுநாள் வீட்டின் அருகே இருந்தவர்களிடம் ஏலா அசாம் சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளனர்.

தங்களை போலீசார் பிடித்துவிடுவார்கள் என்று நினைத்து அசாம் தப்பிக்க தயாராகிகொண்டிருந்த கள்ளக்காதலி தம்மன்னாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான கணவன் ராகுலை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement
/body>