விஜய் ரசிகர்களுக்கு ஆர்வக் கோளாறு.. வன்முறைக்கு அமைச்சர் விளக்கம்

கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, விஜய் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் ஈடுபட்டிருப்பார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர் மன்றத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர். ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல் லைட்டுகள், கண்காணிப்பு கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளி பாதுகாப்புக்காக காவல்துறையினர் அமைத்திருந்த மரக்கட்டை மேடை ஆகியவை நாசமாகின. நகராட்சி தண்ணீர் தொட்டியும் உடைக்கப்பட்டது. கடைகளின் போர்டுகள், பேனர்கள் கிழித்து தீ வைக்கப்பட்டன.

இதையடுத்து, அதிரடி காவல் படையினர் அங்கு வந்து தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இது பற்றி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், விஜய் ரசிகர்கள் ஆர்வக் கோளாறால் ரகளையில் ஈடுபட்டிருப்பார்கள். அரசு விதித்த நிபந்தனையை ஏற்றதால்தான் பிகில் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என்று கூறினார்.

Advertisement