தாம்பரம் அருகே 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த கௌரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் செண்டிரிங் வேலை பார்த்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். கடந்த 2019 ஆண்டில் இருந்து சிறுமியிடம் பழகியுள்ளார். சிறுமியின் தந்தை உயிர் இழந்த நிலையில் வீட்டு வேலை செய்யும் தாய் கவனிப்பில் இருந்து வந்துள்ளார் சிறுமி. சிறுமி கார்த்திக்கின் ஆசை வார்த்தையை நம்பி அவரிடம் பழகி வந்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். சிறுமிக்கு தெரியாமல் கார்த்திக் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை குறித்து தனது நண்பரான மணிகண்டன் ( பனங்காட்டு படைகட்சி கெளரிவாக்கம் மாவட்ட செயலாளர்) என்பவரிடம் கூறி உள்ளார்.
பின்னர் மணிகண்டன் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கூட்டாக அந்த சிறுமியிடம் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டி பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, கார்த்திக், மணிகண்டன் இருவரும் சேர்ந்து மேலும் அவர்களுடைய கூட்டாளியான ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் 40 வயதான தனசேகரை (தி.மு.க தாம்பரம் சட்டமன்ற தொகுதி சமூகவலைதள பொறுப்பாளர்) இதில் இணைத்து கொண்டுள்ளனர்.
அதன்பின்னர் அந்த சிறுமியை மிரட்டி வரவைத்து மது கொடுத்து நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து தொடர்ந்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இதனையடுத்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியை மிரட்டி கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமியை மிரட்டி அவர்கள் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். தொடர்ந்து 3 பேரும் அந்த சிறுமியை ஒரே நேரத்தில் பாலியல் ரீதியில் துன்புறத்தியதால் சிறுமி அதை தாங்கி கொள்ள முடியாமல் நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறி உள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவரிடம் அவரது தாய் தெரிவித்ததை அடுத்து, அவரின் அறிவுரைப்படி இந்த சம்பவம் குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 2 பேர் கைது செய்யபட்டு மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.