இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தெலுங்கானா மாநிலத்திலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 7 ஆயிரத்து 646 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 77 ஆயிரத்து 727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 618 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,261 ஆக அதிகரித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இரவு நேர ஊடரங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மே 8-ம் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.