மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பாகலூரில் பிராமின் தெருவில் வசித்து வருபவர் கோயில் அர்ச்சகர் சென்னபசப்பா. இவருக்கும் கௌரம்மாவுக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.

இவரின் உதவியாளரான கர்நாடகாவை சேர்ந்த மிருத்தியன் என்ற இளைஞர், சென்னபசப்பாவின் வீட்டிலேயே தங்கி பணி செய்து வந்தார். அப்போது கௌரம்மாவுக்கும், மிருத்தியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கௌரம்மாவும், மிருத்தியனும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்ததை சென்னபசப்பா பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கௌரம்மாவை கண்டித்துள்ளார். ஆனால் அவற்றை கௌரம்மா கேட்கவில்லை.

கௌரம்மாவின் பிறந்தநாளான நேற்று முன்தினமும் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சென்னபசப்பா, தனது மனைவி கௌரம்மாவை வேப்பனஹள்ளி அருகே உள்ள பசவேஸ்வரா கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்க கோயில் பரிகாரத்தை சுற்றி வரும்படி கூறியுள்ளார் சென்னபசப்பா, மனைவி கோயிலுக்கு பின்புறம் சென்றதும், அங்கு சென்று அவரின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த கௌரம்மாவை அவரின் துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெறித்துள்ளார். இதனால் கௌரம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து சென்னபசப்பா ஓசூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து சம்மந்தப்பட்ட வேப்பனப்பள்ளி காவல்நிலையத்திற்கு ஒசூர் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சென்னபசப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
/body>