சென்னையில் பறக்கும் ரயிலில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய பலே கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி, கிண்டி ஆகிய பகுதியில் கடந்த 8 மாதங்களில் கிட்டத்தட்ட 17 கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த அனுப்குமார் என்பவரை அடையாறு போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அனுப்குமார் தினமும் பறக்கும் ரயிலில் பயணித்து இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார்.
தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் பறக்கும் ரயில் வழியாக வேளச்சேரி ரயில் நிலையம் வந்து இறங்கி, வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு ஆட்கள் இல்லாமல் இருந்தால் அப்போது அந்த வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வதும், ஆள் நடமாட்டம் இருந்தால் இரவு நேரங்களில் வந்து அந்த வீட்டை உடைத்து நகை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கடைசியாக நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் அவனுடைய முகம் பதிவாகி இருந்ததால் அதனை வைத்து அனுப்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.