மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்க தீர்மானம்

Advertisement

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

MK Stalin and Karunanidhi

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:

தமிழ்ச் சமுதாயம் விழிப்புடன் இருக்க தன் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்த தலைவர் கருணாநிதி, தன் அண்ணனான அண்ணாவுக்கு அருகில் விழி மூடி, ஓய்வு கொண்டிருக்கிறார். அவர் வழியில், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொய்வின்றி தொடர்வோம், ஒற்றுமையோடு திமுக-வை காப்போம் என அவர் நினைவு போற்றி உறுதி எடுப்போம்.

பாஜக ஒப்பற்ற தலைவரும், முன்னாள் பிரதமரும், அனைவராலும் போற்றப்படும் மனிதநேயம் கொண்ட மனிதரும், தலைவர் கருணாநிதியின் உற்ற நண்பருமான அடல் பிகாரி வாஜ்பாய் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு இரங்கலை தெரித்துக்கொள்கிறோம்.

கேரள பெருவெள்ளத்தில் சிக்கி பலியான நூற்றுக்கணக்கானோரின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

தலைவர் கருணாநிதியின் வழிநின்று திமுக-வின் வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ் மொழியின் மேன்மைக்காகவும் மு.க.ஸ்டாலின் அயராது உழைப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.

அத்தனைக்கும் மேலாக ஓய்வின்றி உழைக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் திமுக-வின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக மகளிரணி உளமார விரும்புகிறது, முன்மொழிகிறது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>