விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு: மகாராஷ்டிராவிற்கு முதலிடம்

Aug 24, 2018, 08:45 AM IST

விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துக் கொள்ளும் மாநிங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, தமிழகம் 8வது இடத்தை பிடித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலை அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்வதை தடுப்பதற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

விவசாயிகளின் எண்ணிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. இதில், கடந்த 2013 & 2015ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 11,441 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தில் 3,740 பேர் தற்கொலை செய்து 2வது இடத்தையும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் 3,578 பேர் தற்கொலை செய்துக் கொண்டு 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 1,606 பேர் தற்கொலை செய்துக் கொண்டு, 8வது இடத்தை பிடித்துள்ளது.

You'r reading விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு: மகாராஷ்டிராவிற்கு முதலிடம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை