கோமா நிலையில் தமிழக அரசு- ஸ்டாலின் விமர்சனம்

நீர்மேலாண்மையில் அக்கறை இல்லாத, தமிழக அரசு - ஸ்டாலின்

Sep 3, 2018, 11:51 AM IST

நீர்மேலாண்மையில் அக்கறை இல்லாத, தமிழக அரசு கோமா நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

MK Stalin

திருச்சி முக்கொம்பு மேலணையை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, முக்கொம்பு மதகுகள் போல தான் நடைபெற்றுக் கொண்டுள்ளது. முக்கொம்பு மேலணையில் முன்கூட்டியே ஆய்வு செய்து இருந்தால் அணை உடைந்ததை இந்த அரசால் தடுத்திருக்க முடியும்" என்றார்.

"இதற்கு தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். ஊழல், மணல் கொள்ளை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வருகிறதோ இல்லையோ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு ஒரு கோமா நிலையில் உள்ளது."

"விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்."

"நீர் மேலாண்மையில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். எங்கெங்கு தூர் வாரப்பட்டுள்ளது. எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது என்பது குறித்து பட்டியல் கேட்டு ஏற்கெனவே சட்டமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது."

"இந்த ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடி கோடியாக பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆட்சியை தக்க வைப்பதை தவிர, வேறு எந்த முயற்சியையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை" என்று ஸ்டாலின் கூறினார்.

You'r reading கோமா நிலையில் தமிழக அரசு- ஸ்டாலின் விமர்சனம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை