உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

Sep 3, 2018, 10:58 AM IST
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 82 ரூபாய் 24 காசுகளாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
 
தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து  வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.
 
இதன் காரணமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி 80 ரூபாய் 69 காசுக்கும், ஆகஸ்ட் 29ஆம் தேதி 81 ரூபாய் 22 பைசாவுக்கும், செப்டம்பர் 2ஆம் தேதி 81 ரூபாய் 92 பைசாவாகவும் தொடர்ந்து அதிகரித்தது.
 
இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு அதிகபட்சமாக 32 காசுகள் அதிகரித்து, 82 ரூபாய் 24 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலையும் 42 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 75 ரூபாய் 19 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
 
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், வாடகை வாகனங்கள் ஓட்டுவோரும்,  வாடிக்கையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், காய்கறி, உணவு பண்டங்களின் விலை உட்பட விலைவாசியும் கணிசமாக உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

You'r reading உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை