நடிகர் விஜய் வாங்கி குவித்த சொத்துகள்... தோண்டும் தமிழக அரசு- Exclusive

TN Govt targets Actor Vijay?

Nov 10, 2018, 13:30 PM IST

சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்ததால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகர் விஜய். தற்போது விஜய்க்கு பதிலடி தரும் வகையில் அவரது சொத்து விவரங்களை ஆராய தொடங்கியிருக்கிறது தமிழக அரசு என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்கள் மிகக் கடுமையாக சாடப்பட்டிருந்தன. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லியை வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டினர்.

இதனால் அமைச்சர்களும் அதிமுக தொண்டர்களும் கொந்தளித்தனர். தமிழகம் முழுவதும் சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பாக போராட்டங்கள் வெடித்தன. சர்கார் பேனர்கள் கிழித்து எறியப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து சர்ச்சைக்குரிய 5 நிமிட காட்சிகளை நீக்கியது சர்கார் தயாரிப்பு நிறுவனம். அப்படியும் அமைச்சர்கள் பலரது கொந்தளிப்பு அடங்கவில்லையாம்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து குமுறி கொட்டியிருக்கின்றனர் சில அமைச்சர்கள். கடந்த காலங்களில் விஜய்க்கு ஆதரவாக இருந்தது நமது அரசு; அதையே அவர் விமர்சிக்கிறார்.. நிச்சயம் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்கிற வகையிலும் சில அமைச்சர்கள் ஆவேசத்தைக் காட்டியுள்ளனர்.

அப்போது, நம் மீது ஊழல் புகார் வாசிக்க தொடங்கிய ஸ்டாலினுக்கு பதிலடியாக அவர்கள் ஆட்சிக்கால ஊழலை அம்பலப்படுத்தினோம்; அதேபோல் விஜய் வாங்கிக் குவித்துள்ள சொத்து விவரங்களை வெளியே எடுத்துப் போடுவோம். அவரது மனைவி ஈழத் தமிழர். லண்டனிலும் விஜய்-க்கு சொத்துகள் இருக்கும்.

எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி விஜய் வசனம் பேச தகுதி இருக்கிறதா? என பதிலடி கொடுப்போம் என யோசனை தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து தற்போது நடிகர் விஜய் வாங்கிக் குவித்திருக்கும் சொத்து விவரங்களை தேட துவங்கியிருக்கிறதாம் தமிழக அரசு.

- திலீபன்

 

You'r reading நடிகர் விஜய் வாங்கி குவித்த சொத்துகள்... தோண்டும் தமிழக அரசு- Exclusive Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை