தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கூறியதாவது: குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வரும் 17.10.2020 முதல் 28.10.2020 வரை 12 தினங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
அரசின் வழிகாட்டுதலின்படி கோவிலின் உள்ளே பக்தர்கள் வந்து வழிபட எந்த தடையும் இல்லை. கோவிலுக்கு வெளியில் ய நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட இல்லை. கொடியேற்ற நிகழ்ச்சி, தசரா சூரசம்ஹார நிகழ்ச்சி அனைத்தும் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
18.10.2020 முதல் 25.10.2020 வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் வர அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மற்றும் நேரடியாக வரும் பக்தர்கள் எனத் தினசரி 8,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தசரா சூரசம்ஹார நிகழ்ச்சிகள் கடற்கரை பகுதியில் நடைபெறாது. கோவில் பிரகார பகுதியிலேயே நடத்தப்படும். அன்று பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோவில் பகுதிக்கு வர அனுமதி இல்லை. பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே வேடமிட்டு வீரத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.திருவிழா தொடர்பான 12 நாள் நிகழ்ச்சிகளும் யூடியுப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது. வேடம் அணிந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.