மாற்றுத்திறனாளிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்தது போக்ஸோ சட்டம்.. நியாயம் கேட்டு தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

by Logeswari, Dec 29, 2020, 19:25 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன் பொம்மையா ஊரை சார்ந்தவர் முனியம்மாள். இவர் அக்கம் பக்கத்து வீட்டில் வேலை செய்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் மாற்றுத்திறனாளி ஆவார்.

அதே பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன். இவர் வெல்டிங் கடை வைத்துள்ளார். கடந்த 15 ஆம் தேதி ஐயப்பன் மாற்றுத்திறனாளியான 14 வயது குழந்தையை ஈவு இரக்கம் இல்லாமல் கதற கதற பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் முனியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸ் ஐயப்பனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

இருப்பினும் சில போலீஸ் அதிகாரிகள் ஐயப்பனை எப்படியாவது ஜாமீனில் கொண்டு வர சில பல வேலைகளை செய்துள்ளனர். இதனை நோட்டமிட்ட முனியம்மாள் தனது பெண்ணுக்கு நியாயம் கேட்டு மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்தின் முன் அவரும், அவரது பெண்ணும் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர்.

You'r reading மாற்றுத்திறனாளிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்தது போக்ஸோ சட்டம்.. நியாயம் கேட்டு தாய், மகள் தீக்குளிக்க முயற்சி Originally posted on The Subeditor Tamil

More Thoothukudi News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை