மக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு

by Balaji, Nov 24, 2020, 17:03 PM IST

தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பேருந்து, ரயில் நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பழமை வாய்ந்த இடங்கள், தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் குறித்து தகவல் பலகைகள் அமைக்க எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தாமிரபரணி ஆற்றின் முடிவில் அமைந்துள்ள மருதூர் அணை 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த அணை கட்டுவதற்கு முன் இங்குப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில் இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. சோழர்கள் காலத்தில் இந்த கோயில்கள் அழிக்கப்பட்டு அணை கட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதிகளில் ஏற்கனவே அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுப் பல தொல்லியல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதன் அருகே உள்ள இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து கிடைக்கும் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.இந்த மனு வை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி ஆகியோர் நாட்டிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தமிழகத்திற்குத் தான் வந்து செல்கின்றனர்.ஆனால், பழமையான இடங்கள், அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்கள் பற்றி மக்களுக்கோ சுற்றுலாப் பயணிகளுக்கோ தெரியப்படுத்தப்படுவது இல்லை. இது போன்ற பழமையான இடங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உயர்நீதிமன்ற கிளையின் எதிரே உள்ள யானைமலையில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெயின் படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் இருந்து வருகிறது. ஆனால் அதுபற்றி இங்கு எத்தனை வழக்கறிஞர்களுக்குத் தெரியும்? எனவே பழமையான இடங்கள் குறித்து தகவல் பலகைகள் வைப்பதன் மூலம் அப்பகுதியில் சமூக விரோத செயல்களைத் தடுப்பதுடன் , பழமை அழியாமல் காப்பாற்றவும் முடியும். தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதாக இருக்கும்" என சே நீதிபதி கருத்து கூறினார்.மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு வார இறுதியில் லட்சக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர்.

எனவே மக்களுக்குப் பழமையான இடங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் குறித்துத் தெரியப்படுத்த வேண்டும்" என நீதிபதி கள் கருத்து தெரிவித்தனர்.மேலும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் பழமை வாய்ந்த இடங்கள், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளும் இடங்கள் குறித்து பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You'r reading மக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Thoothukudi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை