ஆன்லைன் விளையாட்டு தடை : அவசர சட்ட நகலை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

by Balaji, Nov 24, 2020, 16:53 PM IST

ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்து தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்ட நகலைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. செல்போன் லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற எந்த உபகரணங்களில் விளையாடினாலும் அதனைக் கண்டறியும் வகையில், சைபர் பிரிவு நிபுணர்களால் கண்டுபிடிக்கப்படும் வகையில் தொழில் நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் இந்த விஷயத்தில் அரசு சரியான முடிவு எடுத்துள்ளது என்றும். கூறிய நீதிபதிகள் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்ய இயற்றப்பட்ட அவசரச்சட்ட நகலைத் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை