சாத்தான்குளத்தில் ஏராளமான இடங்களில் இடங்களில்" தமிழக அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை "என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது . அதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குப் பணக்கார மற்றும் வெளியூர் வேட்பாளர்கள் வேண்டாம். எங்களோடு குடியிருக்கும் உள்ளூர் வேட்பாளர்களே வேண்டும்.வெளியூர் வேட்பாளர்களை நிச்சயம் தோற்கடித்தே தீருவோம் ஸ்ரீ வைகுண்டம் வாக்காளர்கள் என என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த போஸ்டரில் அச்சகத்தின் பெயர் இடம் பெறவில்லை.
ஸ்ரீ வைகுண்டம் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் எனப் பேசப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாகக் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் சிலர் தேர்தல் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் துவக்கமாக அலுவலக திறப்பு விழா மற்றும் கிராமங்கள் தோறும் மத்திய அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் என ஒன்றியம் முழுவதும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள பிரபலமான ஒரு நபரை இத்தொகுதிக்கு வேட்பாளராகக் காங்கிரஸ் கட்சி அறிவிக்கத் திட்டமிட்டு உள்ளதாக வந்த தகவலை அடுத்து அவருக்கு எதிராகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என அரசியல் பிரமுகர்கள் குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியினர் சிலர் கருதுகின்றனர்
இந்த தொகுதியில் ஏற்கனவே திமுக தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது பூத் கமிட்டி அமைத்தல் ,ஆன்லைன் உறுப்பினர் சேர்த்தல்,நிர்வாகிகள் சந்திப்பு ,கலந்துரையாடல் தலைமை கழகத்தினுடைய கலந்துரையாடல் என தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் ஸ்ரீ வைகுண்டம் தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் எனவும் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்
காங்கிரஸ் தங்களுடைய தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இதனால் எம்எல்ஏ கனவில் உள்ள காங்கிரசின் பிரமுகர்கள் சிலர் ஏற்பாட்டின்படி தான் தான் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சுவரொட்டியில் மும்மத சின்னங்களும் அம்பேத்கர்,காமராஜர் ,முத்துராமலிங்க தேவர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் அச்சகத்தின் பெயர் இல்லாமல் சுவரொட்டி அச்சடித்து ஒட்டிய ஆசாமி யார் ? என போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.