திருவள்ளூர் அருகே ஒரே நேரத்தில் 3200 வாத்துக்கள் உயிரிழப்பு

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஒரே நேரத்தில் 3200 வாத்துக்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன இது குறித்து கால்நடை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நெய்த வாயல் பகுதியைச் சேர்ந்த என்பவர் தனவேல். வாத்து வளர்ப்பு தொழில் செய்துவரும் இவரிடம் சுமார் 3500-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் உள்ளன. இதில் நேற்று இரவில் சுமார் 3, 200 வாத்துக்கள் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடைத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வாத்துக்கள் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ள மாற்றங்களை உடற்கூறு ஆய்வு செய்தனர். கனமழையால் குளிர் தாக்கம் ஏற்பட்டு அதனைத் தாங்க முடியாமல் வாத்துக்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கால்நடைத் துறையினர் தெரிவித்தனர்.உடற்கூறு ஆய்விற்குப் பின்னர் உயிரிழந்த 3200 வாத்துக்களும் ஓரிடத்தில் புதைக்கப்பட்டன. ஒரே நேரத்தில் சுமார் 3200 வாத்துக்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement
/body>