அனிதாவின் அதீத சந்தோஷம், நிஷாவிடம் புலம்பும் அர்ச்சனா,ஆரி - பாலா உரையாடல் -பிக் பாஸ் நாள் 64

Advertisement

எவிக்‌ஷன்ல கடைசி நேரத்துல தப்பிச்சதால ஷிவானிக்கு உண்மை நிலவரம் இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்கு. பாலா கூட கண்ணிரோட பேசிட்டு இருக்காங்க. எப்ப அனுப்பினாலும் போறதுக்கு ரெடியா இருக்கனும்னு சொல்லிட்டாரு.

மெர்சல் அரசன் பாட்டு போட்டும் யாரும் ஆடல. இந்த கேப்பி என்ன தான் செய்யுதுனு தெரியல. ப்ரேம்ல கூட வரமாட்டேங்குது.

ஆரி, அனிதா, பாலா மூணு பேரும் டிஸ்கஷன். அர்ச்சனா குரூப்ல இருந்து ஒருத்தர் கூட எவிக்ட் ஆகாதது இப்ப தான் ஆரி கண்ணுக்கு தெரியுது போலருக்கு. நல்லா விளையாடறவங்க வெளியே போகறாங்க, குரூப்பிசம் பண்றவங்க காப்பாற்றப் படறாங்கனு புலம்பிடு இருந்தார். இதை தானே நானும் ஆரம்பத்துல இருந்தே சொல்லிட்டு இருக்கேன்னு பாலாவும் சொல்றாரு.

குரூப்பிசம், கார்னரிங் எல்லாம் சுரேஷ் ஆரம்பிச்சு வச்சது. அதை அப்படியே எடுத்து கமல் சார் முன்னாடி பேசி ஸ்கோர் செஞ்சது பாலா. அர்ச்சனா கேப்டா இருந்த வாரத்துல பாலாவோட சண்டை . அப்ப இடையில பேச வந்த ரியோவை "வச்சுக்கோ" டயலாக் சொல்லி நோஸ்கட் பண்ணினார் பாலா. அந்த சண்டைல பெரும்பான்மையான ஆதரவு பாலா பக்கம் தான் இருந்தது. ரியோவை மூக்குடைப்பு செஞ்சதுக்கு சந்தோஷபட்டவங்க தான் அதிகம்..அந்த வாரம் தான் ஆரி ஜெயிலுக்கு போறாரு. அந்த வாரம் தான் சோம் ஒரு பப்பட்னு சொல்லி நாமினேட் செஞ்சான் பாலா. சோமை யார் இன்ப்ளையன்ஸ் செய்யறாங்கனு கேட்டதுக்கு பகிரங்கமா அர்ச்சனா குரூப் பேரை சொன்னது பாலா.

அந்த வாரம் ஆரி ஜெயிலுக்கு போகும் போது தான் வார்னிங் கொடுத்துட்டு போனாரு. அந்த வாரம் தான் கமல் சார் முன்னாடி குருப்பிசம், கார்னரிங் பத்தி ஆரியும் பேசினாரு. ஆரி சொன்னதெல்லாம் சுரேஷும், பாலாவும் ஏற்கனவே சொன்னது தான். அந்த வார வொர்ஸ்ட் பர்பாமன்ஸ்க்கு சிலர் காப்பாற்றப்பட்டாங்க என்பது தான் ஆரியோட குற்றச்சாட்டு. அந்த டைம்ல பாலா குரூப்னு ஒன்னு கிடையாது.

நியாயப்படி பார்த்தா அந்த வாரத்துல இருந்தே ஆரியும், அர்ச்சனா குரூப்பை எதிர்த்துருக்கனும். ஆனா திடீர்னு யூ டர்ன் போட்டு சம்யுக்தா மேல வன்மத்தோட பழிவாங்கினார் கமல் சார் முன்னாடி ஆரி பேசினது தான் வழக்கு மன்றத்துல கேஸ் வந்தது. குரூப்பிசம், கார்னரிங் பண்றதா ஆரி சொல்றாரு, அதெல்லாம் பொய்னு சம்யுக்தாவோட குற்றச்சாட்டு. ஆனா சம்யுக்தா கேப்டன் ஆக தகுதியே இல்லைனு சம்பந்தமே இல்லாத பதில் சொல்லி, கத்தி பேசி மொத்த பேரையும் கன்ப்யூஸ் பண்ணினாரு ஆரி.

பாலா ஏற்கனவே குரூப்பிசம் பத்தி பேசி அர்ச்சனா குரூப்பை டார்கெட் செய்யறதால தானும் அதையே செய்ய முடியாதுனு முடிவெடுத்துருக்கலாம் ஆரி. ஏன்னா பார்க்கற ஆடியன்ஸ்க்கு புதுசா தெரியாது. அப்படி செஞ்சுருந்தா பாலாவுக்கு பின்பாடி நிக்க வேண்டி இருந்துருக்கும். அதனால தன்னோட கேம் ப்ளானை மாத்திருப்பாருனு நினைக்கிறேன். அதே சமயம் சம்யுக்தாவை பர்சனலா பழிவாங்க வேண்டி இருந்ததால, அவங்களை தன்னோட டார்கெட்டா பிக்ஸ் பண்ணிட்டாரு.

இன்னிக்கு அர்ச்சனா குரூப் பத்தி விமர்சனம் செய்யற ஆரி, கடந்த ரெண்டு வாரமா அவங்க குரூப்போட எப்படி இணக்கமா இருந்தாருனு எல்லாருக்கும் தெரியும். ரமேஷ், ரியோ, அர்ச்சனா கிட்ட தன்னை எப்படி நியாயப்படுத்திகிட்டாருனு நாம பார்த்தோம். ஆனா இன்னிக்கு வேற வழியே இல்லாம பாலா சொன்ன அதே குற்றச்சாட்டை ஆரியும் வெளிப்படையா பேச வேண்டியதாகிடுச்சு. வெளிப்படையாக என்ற வார்த்தையை பயன்படுத்த காரணம், இதுக்கு முன்னாடியும் ஆரி அர்ச்சனா குரூப் பத்தி பேசிருக்காரு. ஆனா பேர் சொல்லாம பொதுப்படையாக பேசுவார். அதுதான் பாலாவுக்கும், ஆரிக்கும் இடையிலான வித்தியாசம். கமல் சார் முன்னாடி பேர் சொன்னது பாலா. ஆனா நேத்து தான் ரமேஷ் பத்தி வெளிப்படையா பேசினாரு ஆரி. அதுக்கு முன்னாடி வரைக்கும் நாமேனேஷன்ல தான் இந்த விஷயத்தை சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஓபன் கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டது. இது ஒரு அப்சர்வேஷன் கேம். காட்சியை பார்த்து அதை நினைவில் வைத்து கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஆண்களை விட பெண்கள் தான் இது போன்ற விளையாட்டில் வெற்றி பெறுவார்கள். அதுவும் அனிதாவுகென்று அளவு எடுத்து செய்த டாஸ்க். இந்த வீட்டில், பேசப்படும் வார்த்தைகளை, சுற்றி நடக்கும் செயல்களை உன்னிப்பாக கவனிப்பவர் அனிதாவை தவிர வேறு யார்.

இறுதியில் வெற்றி பெற்று கேப்டன் ஆனார் அனிதா. அதீத சந்தோஷமும், அழுகையும் கலந்து தனது ட்ரேட் மார்க் குரலில் அழுகிறாரா, சிரிக்கிறாரா என தெரியாத வகையில் ஏதோ ஒன்று செய்தார். அவரின் உணர்வு புரிந்து கொள்ளக் கூடியதே. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டு, எவிக்‌ஷன் ப்ராஸஸில் கடைசி நபராக காப்பாற்றப்படுகிறார். சனம் சென்ற பிறகு அடுத்தது நாம் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு இந்த வாரம் Breathing Space கிடைத்திருக்கிறது. இன்னும் இரண்டு வாரம் அவர் இங்கே இருக்கலாம் என்பதால் ஏற்பட்ட உணர்வு. அதற்குள் எது வேண்டுமானாலும் மாறுமே.

இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் ஆரம்பித்தது. சென்ற வாரம் நடந்த தரவரிசைப்படுத்தும் டாஸ்க் எதற்கும் உபயோகபடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கு தான் டிவிஸ்ட் வைத்தார் பிக்பாஸ். அந்த டாஸ்க்கில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு நாமினேஷனில் இருந்து விலக்கு அளித்தார். முதல் இடம் பிடித்த சனம் வெளியேறி விட்டதால் ஆரி முதல் இடம் பிடித்தார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பாலாவும், அர்ச்சனாவும் பெற்றனர். இதுல ஒரு ப்யூட்டி என்னான்னா, அனிதா தான் மூணாவது இடத்துல இருந்தாங்க, ஆனா வோட்டிங் பிரச்சினைல வெளிய போய்ட்டாங்க. அதனால தான் அர்ச்சனாவுக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. நல்லவேளையா அனிதா கேப்டன் ஆகிட்டாங்க. இல்லேன்னா இந்த ஆபரை மிஸ் பண்ணினதுக்கு ரொம்பவும் வருத்தப்பட்டு மன உளைச்சல்ல இருந்திருப்பாங்க. போன வாரம் மட்டும் சனம் தப்பிச்சிருந்தா இன்னும் ரெண்டு வாரம் இருந்திருக்கலாம்.

ஆரி, பாலா, அர்ச்சனா மூணு பேரும் தனக்கு பதில் ஏற்கனவே சேவ் ஆகிருந்த 3 பேரை நாமினேட் செய்யனும். ஏற்கனவே சேவ் ஆனவங்க லிஸ்ட்.ரமேஷ்,கேப்பி,ஆஜித்,சோம்
ரியோ,ஆஜித் தவிர அர்ச்சனா குரூப் மட்டும் எப்படி சேவ் ஆகிருக்கு பாருங்க. முதல்ல வந்த ஆரி ஜித்து பாய் பேரை சொல்ல, அடுத்து வந்த பாலா கேப்பி பேரை சொல்ல, அர்ச்சனாவுக்கு இருந்தது 3 ஆப்சன். ஆஜித், சோம், ரியோ. இந்த லிஸ்ட் தான் அர்ச்சனாவுக்கு வைக்கப்பட்ட செக். சோம், ரியோ ரெண்டு பேரையும்காப்பாத்த நினைச்சா குரூப்பிசம்னு பேசறது உண்மையாகிடும். இது அர்ச்சனாவுக்கு நல்லாவே புரிஞ்சுது. அதனால சோம் பேரை நாமினேட் செஞ்சாங்க. ஆனா அதுக்காக விழுந்து விழுந்து விளக்கம் சொல்லிட்டு இருந்தாங்க.

இந்த மாதிரி ஒரு நிலைமை வரும்னு தானே பாலாவும் சொல்லிருந்தான். இன்னும் 4 வாரம் போனதுக்கு அப்புறம் யாரை நாமினேட் செய்யப் போறோம். சோ இந்த வாரம் ஹெவி வெயிட்ஸ் ஆரி, பாலா, அனிதா, அர்ச்சனா, கூடவே ஆஜித், ரியோ தவிர மீதி உள்ளவங்க நாமினேட் ஆனாங்க. ரம்யா, ஷிவானி, நிஷா, ரமேஷ், கேப்பி, சோம்.

தனக்கு ஏற்பட்ட இந்த இக்கட்டான நிலைக்கு காரணம் பாலாவும், ஆரியும் தான்னு நினைக்கறாங்க அர்ச்சனா. முக்கியமா பாலாவை தான் நினைக்கறாங்கனு தோணுது. தன் வாயால செல்லப்பிள்ளையை நாமினேட் செய்ய வச்சதை அர்ச்சனாவால தாங்க முடியல. நிஷா கிட்ட புலம்பிட்டு இருந்தாங்க.

ஆரியும் பாலாவும் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருந்தாங்க. எகைன் குரூப்பிசம் தான். நாமினேஷனுக்கு அப்புறம் ஆரி கொஞ்சம் தெளிவா இருந்தாரு. நேர்மையா விளையாடி யார் ஜெயிச்சாலும் எனக்கு பிரச்சினையில்லைனு ஸ்டேட்மெண்ட் கொடுத்து இருந்தார் ஆரி. இருவரும் பேசிமுடித்து கட்டிபிடித்துக் கொண்டனர்.

அஸ்வினி ஹேர் ஆயில் வழங்கிய டாஸ்க் நடந்தது.

இந்த வாரம் என்ன நடக்குதுனு பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>