பிங்க் புடவையில் சும்மா நச்சுனு இருக்கும் விஜே ரம்யா..! இணையதளத்தில் மாஸ் காட்டும் புகைப்படங்கள்..

by Logeswari, Dec 8, 2020, 11:40 AM IST

முதலில் தனது வாழ்க்கையை தொகுப்பாளினியாக தொடர்ந்த ரம்யா இப்பொழுது யாரும் தொடமுடியாத அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றே கூறவேண்டும். டிடி மற்றும் ரம்யா ஆகிய இருவரும் ஒன்றாக தான் தனியார் தொலைக்காட்சியில் விஜேவாக வேலை செய்தனர். அந்த காலத்தில் அழகான டிவி தொகுப்பாளினிகளுள் ஒருவர் ரம்யா. பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கு திருமணம் ஆன சூட்டிலே விவாகரத்தும் ஆனது. தற்பொழுது இவர் டிவி தொகுப்பாளினியாக மட்டும் இருக்காமல் ஒரு படி மேலே சென்று சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதையெல்லாம் மூட்டை கட்டி விட்டு முழு நேரமும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். சமுத்திரக்கனி நடிக்கும் சங்க தலைவன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தார். இரண்டாவது கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த ரம்யாவிற்கு ஹீரோயினியாக நடிக்க அதிர்ஷ்டம் கதவை தட்டியது. ஆனால் 'வந்த ஸ்ரீதேவி வாசப்படியோடு சென்றது' போல் கொரோனா வந்து எல்லாத்தையும் கெடுத்துவிட்டது. ஆனாலும் மனம் தளராத ரம்யா தன்னை மெழுகு தீட்டிக்கொள்ள இந்த லாக்டவுணை சரியாக பயன்படுத்தினார்.

தனது ஒட்டுமொத்த திறமையை காட்டி பல விதமான கவர்ச்சி புகைப்படங்கள், நீச்சல் குள புகைப்படங்கள் ஆகியவையில் போட்டோ ஷூட் செய்தார். அது மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து மக்களுக்கு வெயிட் லாஸ் டிப்ஸ், அழகு குறிப்புகள் என பலவற்றை கற்று கொடுத்தார். இந்நிலையில் பிங்க் புடவையில் ஆளை மயக்கும் தோரணையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பல ரசிகர்களின் கண்களுக்கு பிங்க் ரோஸ் காட்சி தருவது போல அமைந்துள்ளது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்