அதே பொலிவு, உற்சாகம்.. சீரியலில் கால்பதிக்கும் நடிகை நதியா

Advertisement

இளைஞர்களின் கனவுகன்னியாக வளம் வந்தவர் நடிகை நதியா. 80-களில் வெளியான படங்களின் மூலம் அனைவரின் மனதையும் ஆட்கொண்டவர்.

நதியா

200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு,  ஜெயம் ரவியின் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலமாக தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நதியா இன்றும் அதே பொலிவுடனும் உற்சாகத்துடனும் திரையில் தோன்றுவதே அவரின் தனித்துவம். வெள்ளிதிரையில் வெற்றி வாகை சூடிய நதியா தற்போது சின்னத்திரையில் கால் பதிக்க உள்ளார். ராதிகா, குஷ்பு, தேவயாணி வரிசையில் இப்போது நதியாவும் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளார்.

சின்னத்திரையில் சரிகம நிறுவனம் தயாரிக்கும் ‘ரோஜா’ சீரியலில் நதியா இணைத்திருக்கிறார். ஆனால் அவர்  லீட் ரோலில் நடிக்கவில்லை. கெளரவ கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். சில எபிஸோடில் மட்டும் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
/body>