கதையில் சிறு மாற்றம்! - நேர் கொண்ட பார்வை லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் தல 59  படத்துக்கு ‘நேர் கொண்ட பார்வை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டது. 

அஜித்

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தின் தலைப்பு அறிவிக்கும் முதல் பார்வை நேற்றிரவு வெளியானது. இதில் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், பொதுவாக அஜித் நடிக்கும் படத்தின் முதல் பார்வையில் அஜித் மட்டும்தான் இருப்பார். ஆனால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அஜித்தோடு படத்தின் நாயகிகளும் இடம் பிடித்துள்ளனர்.

நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துவருகிறார்.  பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் கேரக்டரில் தான் தமிழில் அஜித் வக்கீலாக நடிக்கிறார். அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். வழக்கில் சிக்கிக் கொள்ளும் முன்று பெண்கள் கேரக்டரில் ஸ்ரதா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் அண்ட்ரியா நடிக்கிறார்கள். தவிர மற்ற கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே, அர்ஜூன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக அஜித்தின் கால்ஷீட் வெறும் 20 நாட்களே.   படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது ஐதராபாத்தில் நடந்துவருக்கிறது.

இந்நிலையில் தமிழுக்காக `பிங்க்’ கதையில் சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி என 'நேர்கொண்ட பார்வை'  மே 1  வெளியாவதாக முன்னர் கூறப்பட்டது. தற்போது அந்த தேதியிலும் மாற்றம் செய்துள்ளது படக்குழு.  படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்தபின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

 

 

 

Advertisement
More Cinema News
kaarthi-jothikas-film-titled-thambi
ஜோதிகா-கார்த்தி நடிக்கும் ”தம்பி”..    பட போஸ்டர் சூர்யா வெளியிட்டார்..
hero-film-release-production-company-statement
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு தடையா? பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்..
vishal-and-shraddha-srinath-s-next-film-chakras-first-look
3 ஹீரோயினுடன் விஷாலின் சக்ரா யுவன் சங்கர் ராஜா இசை..
vijay-sethupathis-sanga-thamizhan-faces-a-last-minute-glitch
சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகவில்லை.. வருத்தத்தில்  விஜய்சேதுபதி...
director-pa-ranjith-issues-statement-on-the-suicide-of-iit-student-fathima-latheef
கல்வி நிறுவன தற்கொலைபற்றி கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் கவலை.. பாகுபாடு காட்டி கொல்வது தொடர் கதையாகிறது..
vishals-action-gets-a-solo-release
தனிகாட்டு ராஜாவாக களமிறங்கிய விஷால்... 4 வது வார ரேஸில் பிகில், கைதி ...
is-amala-paul-out-of-ponniyin-selvan
சரித்திர படத்திலிருந்து அமலாபால் ரிஜெக்ட்...காரணம் என்ன தெரியுமா..?
dhanush-recomands-suriya
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா...புதிய காம்பினேஷனால் உற்சாகம்...
thala-fans-try-to-trend-visvasam-title
அஜீத் விஸ்வாசம் டைட்டில் தெறிக்க விட்ட ரசிகர்கள்.. பதறிப்போன டிவிட்டர் நிர்வாகம்...
thalaivar-darbar-dubbing-starts-today
தர்பார் படத்துக்கு ரஜினி டப்பிங் தொடக்கம்..அப்டேட் செய்த முருகதாஸ்...
Tag Clouds