டுவின் சிட்டீஸ் தமிழர் திருவிழா! அமெரிக்காவில் கோலாகல பொங்கல் கொண்டாட்டம்

Advertisement

மின்னடோங்கா: தமிழர்கள் அதிகம் வசிக்கும் மின்னடோங்கா கவுன்டியில் நேற்று பிரமாண்ட டுவின் சிட்டீஸ் 5ம் ஆண்டு தமிழர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில், தமிழர்களின் கலாசாரத்தை ஓங்குவிக்கும் வகையில் கோலாகல பொங்கல் கொண்டாட்டமும் இடம்பெற்றது.

அமெரிக்காவில், மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ஹென்னெப்பின் மாகாணத்தில் மின்னடோங்கா என்ற புறநகர் பகுதி உள்ளது. அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் மின்னடோங்காவும் ஒன்று.

தமிழர்கள் அமெரிக்காவிற்கு சென்றாலும் தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் மறவாமல் தமிழை கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழையும், தமிழர்களின் கலாசாரத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் மின்னசோட்டாவில் ஆண்டுதோறும் டுவின் சிட்டீஸ் தமிழ் சங்கம் சார்பில் தமிழர்கள் கலாசாரத் திருவிழா நடைபெற்று வருகிறது.

அதன்படி, தற்போது 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழ் சங்கம் நேற்று (ஜனவரி 20ம் தேதி) தமிழர்களின் கலாசாரத் திருவிழாவை கோலாகலமாக நடத்தியது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

மின்னடோங்கா பகுதியில் உள்ள மின்னடோங்கா உயர்நிலை பள்ளியின் ஆர்ட்ஸ் சென்டரில் நேற்று மதியம் 1 மணியளவில் தொடங்கிய திருவிழா, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் மாலை 6 மணியளவில் நிறைவுப் பெற்றது.

இந்த திருவிழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி பரதநாட்டியம், திரை இசை நடனம், திரை இசை நாடகம், திரை இசை பாடல், நகைச்சுவை பேச்சு, ஆடை அலங்கார அணிவகுப்பு என பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில், ஆண்கள் வேட்டி சட்டையிலும், பெண்கள் புடவையிலும், சிறுவர்கள் பாவாடை சட்டை, வேட்டி சட்டையிலும் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தினர்.

அமெரிக்காவில் வசித்தாலும், தமிழை மறவாமல் தங்களின் குழந்தைகளுக்கும் தமிழ் கலாசாரத்தின் பெருமையை புகுட்டும்ம் டுவின்சிட்டீஸ் தமிழ் சங்கத்தின் முயற்சி பல ஆண்டுகளுக்கு தொடர வாழ்த்துகளையும் தொரிவித்துக்கொள்வோம்..

தமிழர் கலாச்சார திருவிழாவில் இடம்பெற்ற சுட்டிஸ்களின் அழகிய திரை இசை நடனம் வீடியோ இதோ..

Advertisement
/body>