மாலத்தீவு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அந்நாட்டு பிரதமர் அவசரநிலை பிரகடனம் செய்ததை அடுத்து, இந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு அதிபர் யாமீன் அப்துல் கயூம் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இந்த அவசர நிலை 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
மாலத்தீவில் கடந்த 2013ம் ஆண்வு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற யாமீன் அப்துல் கயூம் அதிபராக பொறுப்பேற்றார். விரைவில் நடைபெறவுள்ள தேர்தலிலும் வெற்றிப்பெற்று அதிபர் பொருப்டை நீட்டிக்க அப்துல் கயூம் காயர் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் அறிவித்த சில உத்தரவுகளால், அப்துல் கயூமின் ஆட்சியை கவிழும் நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தை முடக்கி அதிபர் யாமின் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாலத்தீவு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அப்துல்லா சயீது உள்பட மேலும் இரண்டு நீதிபதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நீதிபதிகள் கைது செய்யப்பட்டதற்கு மாலத்தீவு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அதிபர் யாமீன் அப்துல் கயூம் மாலத்தீவு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
இதைதொடர்ந்து, அனைத்து அரசு அலுவலங்களையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கோர்ட்டுகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மாலத்தீவில் அதிபர் யாமீனின் செயல்பாடுகள் அத்துமீறி செல்வதால், உடனடியாக இந்தியா தலையிட வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீத்தும் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.
இந்நிலையில், உதவி தேவைப்படும் பட்சத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மாலத்தீவுக்கு செல்லும் வகையில் இந்தியா தனது கடற்படையையும், விமானப்படையையும் தயார் நிலையில் வைத்துள்ளது. இதை தவிர, ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படை வீரர்களும் மாலத்தீவுக்கு செல்ல தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் செய்து அதிபர் அறிவித்துள்ளதால், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற பரபரப்பான சூழ்நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.