“இந்தியக் கிராமங்களுக்கு வெளிச்சம் வேண்டும்” - தீவிர முயற்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்!

அமெரிக்கவாழ் இந்தியரான ராஜிவ்ஷா தனது மனிதநேய நிறுவனம் மூலம் இந்தியக் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரும் தன்னார்வ நிறுவனம் 'ராக்கெட்ஃவெல்லர் அமைப்பு'. சர்வதேச அளவில் மக்களின் பொது மேம்பாடுக்காக இந்நிறுவனம் தன்னார்வத்துடன் பலரின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்தி வருகிறது.

இதன் நிறுவனராக இருக்கும் ராஜிவ் ஷா ஒரு அமெரிக்கவாழ் இந்தியர் ஆவார். ஒவ்வொரு ஆண்டும் 200 மில்லியன் டாலர்கள் மக்களின் நலவாழ்வுக்காக இந்த அமைப்பால் ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு 'ஸ்மார்ட் பவர் இந்தியா' என்ற திட்டத்தின் மூலம் இந்தியக் கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ராஜிவ் ஷா.

தனது திட்டம் குறித்து ராஜிவ் கூறுகையில், "இந்திய அரசாங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் யோசனைகளைக் கேட்டு வருகிறோம். விரைவில் இவர்களுடன் இணைந்து இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்யும் முயற்சியில் உள்ளோம்" என்றார்.

Advertisement